திங்கள், 1 பிப்ரவரி, 2010

புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழ் இந்தியாவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது -மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்..!!

இந்தியாவின் மத்திய உளவுப்பிரிவான சிபிஐக்கு விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மரணச்சான்றிதழ் கிடைக்கப் பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார் சற்றுநேரத்திற்கு முன்னர் இதை இவர் ஊடகவியலாளர்களிடம் உறுதி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் மத்திய உளவு நிறுவனமான சிபிஐ தம்முடன் தொடர்பு கொண்டு இதனைத் தெரிவித்ததாக அமைச்சர் ப.சிதம்பரம் மேலும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ராஜீவ்காந்தி கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த வருடம் மேமாதம் 18ம் திகதி இறந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து அதனை உறுதிப்படுத்துமாறு இந்தியா பலமுறை கேட்டும் மரணச்சான்றிதழ் தொடர்பில் முரண்பாடு நிலவி வந்தது. தற்போது மத்திய உளவுப்பிரிவுக்கு (சிபிஐ) மரணசான்றிதழை அனுப் ;துள்ளது இதேவேளை நேற்று மத்திய புலனாய்வு பிரிவினர் தம்மிடம் மரணச் சான்றிதழ் இன்னும் கிடைக்கவில்லையென நேற்றையதினம் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக