ஞாயிறு, 1 மார்ச், 2015

முன்னாள் கடற்படைப் பேச்சாளரிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை...!!

முன்னாள் கடற்படைப் பேச்சாளர் டி.கே.பீ. தஸநாயக்கவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை மாலை, முன்னாள் கடற்படைப் பேச்சாளர் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் கொழும்பில் இளைஞர்கள் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் கொழும்பைச் சேர்ந்த சுமார் 30 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடத்தி கப்பம் கோரி கொலை செய்த சம்பவங்களுடன் முன்னாள் கடற்படைப் பேச்சாளர் தஸநாயக்க உள்ளிட்ட மூன்று உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும்ää சில கடற்படை உத்தியோகத்தர்களும் இதில் தொடர்புபட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுக்கள் உயர் கடற்படை அதிகாரியொருவர் காரியாலயத்திலிருந்து மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக