வியாழன், 4 பிப்ரவரி, 2010

அரசியல்வாதிகள் மக்களை ஒருபோதும் தவறான பாதையில் வழிநடத்தக் கூடாது -ஜனாதிபதி..!!

இலங்கையின் ஜனாதிபதி வரலாற்றில் அதிஷ்டமுள்ள ஜனாதிபதி நானே என்பதில் பெருமை கொள்கிறேன். அரசியல்வாதிகள் மக்களை ஒருபோதும் தவறான பாதையில் வழிநடத்தக்கூடாது. நான் நாட்டைக் காட்டிக்கொடுப்பதற்கான எந்த முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. இனியும் அவ்வாறான செயலை செய்யமாட்டேன் என இன்று கண்டி தலதாமாளிகை வளாகத்தில் இடம்பெற்ற சுதந்திரதின வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்நாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் மன்னர்களே. 30வருட காலத்தில் இந்நாட்டில் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருந்தது. அந்நிலைமையை நான் முற்றாக மாற்றியமைத்தேன். வடக்கு கிழக்கில் ஜனநாயக முறையில் தேர்தல் நடந்தது. வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் ஆகிய பாரிய அபிவிருத்தி திட்டங்களை நாம் அப்பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றோம். அரசியல்வாதிகள் மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக