வியாழன், 4 பிப்ரவரி, 2010

மடுவில் இருந்து தலைமன்னார் வரையான ரயில்பாதையை புனரமைக்க நடவடிக்கை..!

மன்னார் மடுவிலிருந்து தலைமன்னார் வரையிலான ரயில்பாதையை புனரமைப்புச் செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி புனரமைப்புப் பணிகளை எதிர்வரும் வாரமளவில் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்கள வர்த்தகப் பிரிவின் அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். 63கிலோமீற்றர் தூரமுடைய குறித்த ரயில்பாதையின் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்திய நிறுவனமொன்றுடன் ஒப்பந்தமொன்றிலும் கைச்சாத்திட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் இந்த ரயில்பாதையின் புனரமைப்புப் பணிகளுக்காக 10லட்சத்து 149ஆயிரம் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்படவுள்ளதுடன், எதிர்வரும் 02வருடங்களில் புனரமைப்புப் பணிகளை நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக