ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

காங்கேசன் துறைவீதி விஸ்தரிப்பு வரும் 10ம் திகதி தீர்க்கமான முடிவு என்கிறார் ஆளுநர்

யாழ்நகரில் இருந்து காங்கேசன் துறை வரையான பிரதான வீதி (கே.கே.எஸ்)வீதி விஸ்தரிப்பு தொடர்பாக எதிர்வரும் 10ம் திகதி சகல தரப்புகளுடனும் கலந்துரையாடிய பின்னரே தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார் யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அவர் தமது அலுவலகத்தில் நடத்திய கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார் மேற்படி கூட்டத்தில் கே.கே.எஸ்.வீதியை விஸ்தரிக்கும் தற்போதைய திட்டத்தினால் ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்து பங்கு பற்றியவர்கள் ஆளுநருக்கு விளக்கிக் கூறினார்கள். இதுதொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினரையும் வேலை ஒப்பந்தகாரரையும் கல்லூரி அதிபர்களையும் ஆலய நிர்வாகிகளையும் அழைத்து எதிர்வரும் 10ம் திகதி கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு தாம் முடிவு எடுத்துள்ளதாகவும் அந்த கூட்டத்தில் ஆராய்ந்து தீர்க்கமான முடிவ ஒன்று எட்டப்படும் என ஆளுநர் உறுதியளித்துள்ளார். இக்கூட்டத்தில் இந்துமாமன்றத்தி;ன் சார்பில் அதன் உபதலைவர் ஆறுதிருமுருகன் மன்றத்தின் யாழ் பிராந்திய பணிமனை நிர்வாக அலுவலர் வி.ஜயசிங்கம் யாழ்பல்கலைக்கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கம் விரிவுரையாளர் பொ.அகிலன் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக