ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

இலங்கையில் அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டிருந்ததை பெபரல் அமைப்பு விமர்சித்துள்ளது

இலங்கை நாடாளுமன்றத்தால் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதை நியாயமான நேர்மையான தேர்தலுக்கான மக்கள் அமைப்பான பெபரல் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ரோஹன ஹெட்டியாராச்சி இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் போர் நிறைவுபெற்றுவிட்டது ஜனாதிபதித் தேர்தலும் நடந்துமுடிந்துவிட்டது குறுகியகாலத்தில் நாடாளுமன்றத்தேர்தலும் நடக்கபோகிறது எனவே இப்போது இதுபோன்ற அவசரகாலசட்டத்தை நீடிக்கவேண்டிய தேவையில்லை என்றார் அதேநேரம் அவசரகால நிலை காரணமாக தேர்தல் நடைமுறைகளுக்கு நேரடி பாதிப்பு இல்லை என்றும் ஆனாலும் சில நேரங்களில் அரசியல் நோக்கங்களுக்காக இதை துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்புள்ளது எனவும் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக