ஞாயிறு, 10 ஜனவரி, 2010

சரத்பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வேலையற்ற பட்டதாரிகள் புறக்கணிப்பு..!!

ஜெனரல் சரத் பொன்சேகாவினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையான மாற்றம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வேலையற்ற பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வேலையற்ற சுமார் 35ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளின் தொழில்வாய்ப்பு மற்றும் எதிர்காலம் குறித்து விஞ்ஞாபனத்தில் எவ்விதமான யோசனைகளும் முன்வைக்கப்பட வில்லையென கிழக்கு மாகாண பட்டதாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே 42ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறும் இந்த வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாங்களிப்பதன் மூலமே பட்டதாரிகளின் வேலைவாய்ப்பை உறுதி ப்படுத்த முடியுமெனவும் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக