ஞாயிறு, 10 ஜனவரி, 2010

சுற்றுலாத்துறைக்கு உலகின் முதன்நிலை நாடாக இலங்கை..!!

சுற்றுலாக்களை மேற்கொள்ளக்கூடிய உலகின் முதன்நிலை நாடாக டைம்ஸ் பத்திரிகை இலங்கையை பட்டியலிட்டுள்ளது. உலகின் மிகப் பிரபல்யமான அமெரிக்கப் பத்திரிகையான நியூயோர்க் டைம்ஸின் பட்டியல்படுத்தலின் அடிப்படையில் இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு சொர்க்கபுரியாக அமையுமென கூறப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டின் மிகச் சிறந்த சுற்றுலா நாடாக இலங்கையை நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவுசெய்துள்ளது. யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கு சுற்றுலாக்களை மேற்கொள்வதில் எவ்வித சிக்கல்களும் இல்லையென அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக திருமலையின் நிலாவெளி கடற்கரை போன்ற பிரதேசங்களுக்கு பயணம் செய்வது மிகவும் பயனுள்ளதெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் பாதுகாப்புக் கெடுபிடிகள் முழுமையாக தளர்த்தப்படாத காரணத்தினால் சில பிரதேசங்களுக்கான சுற்றுலாப் பயணங்களை சுதந்திரமாக மேற்கொள்வதில் இன்னமும் சிக்கல்நிலை காணப்படுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக