ஞாயிறு, 10 ஜனவரி, 2010

யாழில் தமிழ்க்கூட்டமைப்பின் வருடாந்த தேசிய மாநாடு..!!

தமிழ்பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் எதிர்காலத்தில் அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வருடாந்த தேசிய மாநாட்டில் இன்று கலந்துரையாடப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்துகொண்டிருந்த பலரும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி எடுத்துரைத்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வருடாந்த தேசிய மாநாடு இன்றுகாலை 10மணிக்கு யாழ்ப்பாணம், சட்டநாதர் கோவிலடி இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா தலைமையேற்று நடத்தினார். தமிழ்த் தேசயக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமசந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோர் உரையாற்றினர். இலங்கை தமிழரசுக் கட்சியின் 60ம் ஆண்டு நிறைவுமலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் வருங்காலத்திலான அகிம்சை வழியிலான கொள்கைகள் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குதல் மற்றும் தமிழ்பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பான தீர்வுகளை பெறுவதற்காகப் போராடுதல் போன்ற விடயங்கள் பற்றிக் கட்சி உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக