வியாழன், 28 ஜனவரி, 2010

ஜனாதிபதியின் இருப்பை உறுதிப்படுத்த வாக்ககளித்த வன்னி மக்களுக்கு நன்றி-அமைச்சர் ரிசாத்..!!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்தி இம்முறை வன்னி மாவட்டத்தில் வாக்களித்த வாக்காளர்களுக்கு வன்னிமாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தமது நன்றியை தெரிவித்துள்ளார். 2005ம் ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ போட்டியிட்டபோது 17,000 வாக்காளர்களே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்தனர். ஆனால், இம்முறை 48,800 பேர் வாக்களித்துள்ளனர். தற்போது வாக்களிப்பில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பானது ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கும், மக்களின் எதிர்காலத்திற்கும் கிடைத்த அங்கீகாரமாகும். வன்னி மாவட்டத்தில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்களமக்கள் மிகவும் தெளிவாக தமது வாக்குகளை அளித்து வன்னிமாவட்ட மக்களுக்கு வளமான எதிர் காலத்தையேற்படுத்தியுள்ளமைக்கு நன்றிகளை தெரிவிப்பதாகவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். மக்களை ஏமாற்றி மீண்டும் அச்சமான சூழலை ஏற்படுத்த எதிர்க்கட்சிகளின் கூட்டு எடுத்த பிரசாரங்களை மக்கள் இத்தேர்தல் வாக்களிப்பில் நிராகரித்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவானது, ஜனநாயகத்தை விரும்பும் மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையையே மீண்டும் மக்கள் விரும்புகின்றனர் என்பதை எடுத்துரைக்கின்றது. வன்னி மாவட்டத்தில் தற்போது வசிக்கும் மக்களும் யுத்தத்தால் இடம்பெயர்க்கப்பட்டு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் தமது நன்றிகளை தெரிவிப்பதாகவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக