திங்கள், 25 ஜனவரி, 2010

இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவே ஐ.தே.கட்சி ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் இராணுவ தளபதியை நிறுத்தியுள்ளது -வாசுதேவ நாணயக்கார..!!

இந்நாட்டில் ஜனநாயக ஆட்சிமுறைக்கு முற்றுபுள்ளிவைத்து இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவே ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் இராணுவ தளபதியை நிறுத்தியுள்ளது என பழம்பெரும் இடதுசாரி கொழும்பு மாநகர எதிர்கட்சித்தலைவர் வாசுதேவநாணயக்கார தெரிவித்துள்ளார். ஜனநாயகம் இந்நாட்டில் நிலைபெறவேண்டும் அதன்மூலம் பல காரியங்களை நாம் சாதிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலும் இலங்கையின் எதிர்காலமும் என்னும் தொனிப்பொருளில் வவுனியா நகரசபை மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்நாட்டிற்கு பெரும் பிரச்சினையாக இருந்து வந்தயுத்தம் முடிவடைந்தநிலையில் நாங்கள் ஜனநாயக ஆட்சி ஏற்படுவேண்டும். நாட்டின் தலைவர் ஜனநாயகரீதியாக தெரிவு செய்யப்படவேண்டும். ஆனால் ஐக்கியதேசிய கட்சி இராணுவ தளபதியை வேட்பாளராக நிறுத்தி இந்நாட்டில் ஒரு இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் முனைப்பில் ஈடுபட்டுள்ளார்கள். இதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்களும் துணைபோகின்றனர். இராணுவ மயமாக்கல்pனால் அழிவுதான் ஏற்படும். இராணுவ மயமாக்கல் நாடுகளில் பெரும் அழிவு ஏற்பட்டது அறிவீர்கள். நாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம், ஜனநாயகரீதியில் அரசியலுக்கு வந்த தலைவர் மகிந்தராஜபக்ஷ. அவரை வெற்றிபெற செய்வது சகலரின் கடமையாகும். எதிர்வரும் 26ம் திகதி வெற்றிலைக்கு வாக்களித்து வெற்றியை உறுதிப்படுத்துங்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக