திங்கள், 25 ஜனவரி, 2010

கையில் அதிகாரம் இல்லாததால் எந்த வாக்குறுதியையும் வழங்கலாம் -ஜனாதிபதி..!!

அரசாங்க ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா சம்பளம் தருவதாக எதிரணி வேட்பாளர் கூறுகிறார். கையில் அதிகாரம் இல்லாததால் அவர் எந்த வாக்குறுதியையும் வழங்கலாம். ஆனால் அவரால் அதை நிறைவேற்ற முடியுமா? இது நிறைவேற்ற முடியாத பொய் வாக்குறுதி என்று மக்களுக்குத் தெரியும். செய்யமுடிந்ததையே நான் கூறுவேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கில் தமிழ்மக்கள் இப்போது நிம்மதியாக உள்ளனர். அவர்களுக்கு பயங்கரவாதிகளின் பிரச்சினை இல்லை. அவர்கள் சமாதானமாக வாழமுடிகிறது. பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. ஏ9 வீதி திறக்கப்பட்டு விட்டது. பொருட்களை வரிஇல்லாமல் எடுத்துச் செல்லக்கூடிய போக்குவரத்து வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. வயல்களில் வேலைசெய்ய முடிகிறது. பாடசாலைகள் திறக்கப்பட்டுள் ளன. அண்மையில் அங்கு நான் சென்றபோது இதனை நேரில் காணமுடிந்தது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து பேசியுள்ளார். ஜனாதிபதியிடம் பத்திரிகை ஆசிரியர்கள் பல்வேறு விடயங்களை பேசியுள்ளனர். கேள்விகளையும் கேட்டிருந்தனர். அவ்வாறு கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக