தாம் ஆட்சிக்கு வந்தால் அமைச்சரவையை குறைப்பதுடன் அதன் செலவினத்தையும் குறைக்கப் போவதாக ஜனாதிபதி பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்போது இலங்கை அரசாங்கத்தில் 132 அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவைக்கான வருடாந்த செலவினம் 4மில்லியன் ரூபா எனவும் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள 9மில்லியன் வறுமையான மக்களுக்கு சமூர்த்தி கொடுப்பனவுகளுக்காக 10மில்லியன் ரூபாய்களே ஒதுக்கப்படுவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தாம் ஆட்சிக்கு வந்தால் அமைச்சரவையை குறைப்பதுடன் அதன் செலவினத்தையும் குறைக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1.2 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட இந்தியாவிலேயே 48 அமைச்சர்களே உள்ளதாகவும் இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன் அரசாங்கம் வரி விதிப்பின் மூலம் பெற்றோல் 1லீற்றரில் இருந்து 65 ரூபாவை வருமானமாக பெறுவதாகவும் சரத்பொன்சேகா சுட்டிக் காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக