திங்கள், 25 ஜனவரி, 2010

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காக பொதுவேட்பாளர் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு..!

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா, நேற்று கம்பஹா மாவட்டம் நிட்டம்புவ, ஹொரகொல்லையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் இல்லத்துக்கு விஜயம்செய்து, அவரைச் சந்தித்துக் கலந்துரையாடி, இந்த ஜனாதிபதித் தேர்தலில் அவரின் ஆதரவைத் தமக்குப் பெற்றுக்கொண்டுள்ளார். இச்சந்திப்பின் பின்னர், ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் பொன்சேகாவைத் தாம் ஆதரிப்பதாக சந்திரிகா குமாரதுங்க செய்தியாளர்களிடம் பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின்கீழ் ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சி ஜனநாயக விரோதப் பாதையில் கொண்டு செல்லப்படுகின்றது எனவும், இது குடும்ப ஆதிக்கத்திற்கு வழி வகுத்துள்ளது எனவும் சந்திரிகா குமாரதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக