செவ்வாய், 12 ஜனவரி, 2010

தோல்வியைக் கண்டு அரசாங்கம் பீதியடைந்துள்ளது -ரணில்..!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவது நிச்சயம் என்ற காரணத்தினால் அரசாங்கம் பீதியடைந்துள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தோல்வியைகண்டு தாங்க முடியாது நாட்டின் ஜனநாயகத்தை ஆளும் கட்சியினர் சீர்குலைக்க கூடாதெனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார் தோல்வியை தாங்கி கொள்ள முடியாதவர்களுக்கு தமது சொந்த செலவில் விமானசீட்டுகளை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். அரச ஊடகங்களில் ஜே.வி.பி. மற்றும் ஐக்கிய தேசியகட்சிக்கு எதிராக கடும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான ஓர் பின்னணியில் எதிர்கட்சிகள் குரோத அரசியலில் ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதி குற்றம் சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதொன்றென அவர் தெரிவித்துள்ளார். தோல்வி நிச்சயமாகி விட்ட நிலையில் அரசாங்கம் செய்வதறியாது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கட்சி மீது சுமத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்கட்சிக்கு ஆதரவளிக்கும் குழுக்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக