செவ்வாய், 12 ஜனவரி, 2010

புதுக்குடியிருப்பு அடம்பன் மற்றும் இரணைமடு ஆகிய பிரதேசங்களில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு..!!

வடக்கின் பல்வேறு பிரதேசங்களில் பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையொன்றில் பாரியளவிலான இராணுவ தளபாடங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இந்த நடவடிக்கைகள் புதுக்குடியிருப்பு அடம்பன் மற்றும் இரணைமடு ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின ;போது ரி56 ரகதுப்பாக்கிகள் 81, டெட்டனேட்டர்கள், 3000க்கும் அதிகமான ஏ56 ரக துப்பாக்கி ரவைகள், சி4 வெடிப்பொருட்கள், கைகுண்டுகள், இயந்திர துப்பாக்கிகள் என ஏராளமான ஆயுதங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட 13 வெடிகுண்டுகளும் தானியக்கிகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை மட்டக்களப்ப வாழைச்சேனையிலும் இ;வ்வாறான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக