சனி, 9 ஜனவரி, 2010

காலமாற்றத்திற்கேற்ப தொழில் மேற்கொள்ளும் முறைமைகளையும் நவீனமயப்படுத்த வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா..!!

வேகமாக மாறிவரும் உலகச்சூழலுக்கேற்ப தொழில் செய்யும் முறைமைகளையும் நவீனமயப்படுத்த வேண்டும் இவ்வாறு யாழ். சலவைத் தொழிலாளர் சம்மேளனப் பிரதிநிதிகளிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். இன்று மாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ். பணிமனைக்கு வருகை தந்திருந்த யாழ். மாவட்ட சலவைத்தொழிலாளர் சம்மேளனப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமது தொழில் நிலைமை தற்சமயம் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமது கோரிக்கைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் பிரதிநிதிகள் தெரியப்படுத்தினார்கள். அவர்களது கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்தி அவர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏனைய தொழில் செய்வோர் காலவோட்டத்திற்கேற்ப தத்தமது தொழில் முறைமைகளை நவீனமயப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் சலவைத் தொழிலாளர்களும் தொழில் முறைகளை மாற்றிக்கொள்ளவேண்டிய தருணமிது. குறிப்பாக நீர்நிலைகளை அண்டி காலாதிகாலமாக தொழில் மேற்கொள்ளும் தொழிலாளர்கள் சலவை இயந்திரங்ளை பயன்படுத்தி பெருமளவு சலவை வேலைகளை குறைந்த நேரத்தில் மேற்கொள்ளமுடியும். இதுதொடர்பாக வேண்டிய உதவிகளை பெற்றுத்தர தம்மால் முடியும் எனவும் அமைச்சரவர்கள் தெரிவித்தார். யாழ். சலவைத் தொழிலாளர் சம்மேளனப் பிரதிநிதிகளுடனான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சந்திப்பில் யாழ். மாநகரசபை உறுப்பினர் கனகரட்ணம் மாஸ்டரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக