திங்கள், 11 ஜனவரி, 2010

ஏ9 வீதியில் அனுமதிப்பத்திரம் அல்லாத தனியார் பஸ்வண்டிகள் சேவையில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டு..!!

ஏ9 வீதியில் அனுமதிப்பத்திரம் அல்லாத தனியார் பஸ்வண்டிகள் சேவையில் ஈடுபடுவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த பஸ் வண்டிகளில் பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் அறிவிடப்படுவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கும் இத்தகைய எட்டு சொகுசு பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சில பஸ் வண்டிகளில் இரட்டிப்பு கட்டணம் அறவிடப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் ஏனைய பஸ் உரிமையாளர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். கடந்தமாதம் 28ம் திகதி இது தொடர்பாக தேசிய பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் எழுத்தமூலம் முறைப்பாடொன்றை சமர்ப்பித்தோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்hளர். இதுபற்றி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமல்குமாரகே கூறும்போது, ஏ9 வீதியில் பஸ் சேவையினை நடத்துவதற்கான அனுமதி இலங்கைப் போக்குவரத்து சபைக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தனியார் பஸ் உரிமையாளர்களின் செயற்பாடு குறித்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக