திங்கள், 11 ஜனவரி, 2010

30வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் வடக்கிலும் தெற்கிலும் மக்கள் நத்தாரை சுதந்திரமாக கொண்டாடினர் -ஜனாதிபதியிடம் யாழ். ஆயர்..!!

30வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் வடக்கிலும் தெற்கிலும் மக்கள் நத்தாரை சுதந்திரமாக கொண்டாடினர். இப்போது மக்கள் கடலுக்கும் கரைக்கும் சுந்திரமாக சென்று தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளமுடிகிறது என்று யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று யாழ்.ஆயர் தோமஸ் சௌந்திரநாயகத்தின் வீட்குக்கு சென்றிருந்தார். அப்போதே ஆயர் ஜனாதிபதியிடம் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். யாழ்ப்பாண சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பரி. பவுல் கன்னியர் மடத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துமாறும் ஆயர் அச்சமயம் ஜனாதிபதியை கேட்டுக் கொண்டார். ஜனாதிபதி உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளார். அதேபோன்று யாழ்ப்பாணத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வணக்கத்தலங்களில் மக்கள் சுதந்திரமாக வழிபட ஆவன செய்யுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கும் ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார்.n தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஆயர் கேட்டதையடுத்து அது தொடர்பாக சட்ட ரீதியாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் கிரமமே முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி பதிலளித்தார். அத்துடன் அந்நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக வும் ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவுற்றதையடுத்து முப்படைகளின் தளபதி என்ற ரீதியில் முதன்முறையாக யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி யாழ்.பொது நூலகத்துக்கும் விஜயம் செய்திருந்தார். 1983ஆடிக் கலவலரத்தின்போது தென்னிலங்கை அரசியல்வாதிகளின் தலையீட்டில் யாழ்.பொது நூலகம் எரியூட்டப்பட்டதை ஜனாதிபதி இங்கு நினைவூட்டினார். அச்சமயம் யாழ்.பொது நூலகம் ஆசியாவின் மிகப்பெரிய நூலகமாக இருந்தது. அதனை மீண்டும் அதேநிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அங்கு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக