ஞாயிறு, 31 ஜனவரி, 2010

எதிர்வரும் 4ம் திகதி ஜனாதிபதி பதவிப்பிரமாணம் நாடாளுமன்றம் 5ம் திகதி கலைப்பு..!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 4ம் திகதி இரண்டாவது முறையாகவும் பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார் இதனை அவர் நேற்று மல்வத்து மகாநாயக்க தேரரை கண்டியில் சந்தித்த போது தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் முதலாவது பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் 2011ம் அண்டு நவம்பர் மாதம் இரண்டாவது தடவையாகவும் பதவிப்பிரமாணம் செய்துக் கொள்வார் என்ற தகவல் முடிவுக்கு வந்துள்ளது. இதேவேளை நாடாளுமன்றத்தை கலைக்கும் அறிவிப்பை ஜனாதிபதி எதிர்வரும் 5ம்திகதி விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து இரண்டு வாரங்களுக்குள் தேர்தல்கள் ஆணையாளர் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்களை கோருவார் இந்நிலையில் அவசரகால சட்டவிவாதம் நடைபெற வேண்டியுள்ளதால் பெரும்பாலும் பொதுத்தேர்தல் மார்ச்மாதம் இறுதியில் அல்லது ஏப்ரல்மாத முதல் வாரத்தில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் முதல் வெளிநாட்டு விஜயமாக ரஷ்யாவுக்கு செல்லவுள்ளதாகவும் அங்கு அவர் நாட்டின் அபிவிருத்திக்காக 300மி;ல்லியன் கடன்உதவி தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக