ஞாயிறு, 31 ஜனவரி, 2010

ஏப்ரல்மாதம் 9ம் திகதி பொதுத்தேர்தல் -திவயின..!!

எதிர்வரும் ஏப்ரல்மாதம் 9ம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என திவயின செய்தி வெளியிட்டுள்ளது சுதந்திரத் தினத்திற்கு மறுநாள் நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பொதுத்தேர்தல் பணிகளுக்காக 180கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிங்களத் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது புத்தாண்டு காலத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் அதன் மூலம் பல்வேறு பாதிப்புக்கள் எற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் இதனால் மக்களுக்கு இடையூறு அற்ற வகையில் தேர்தல்களை நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பொதுத்தேர்தல் பணிகளுக்காக 180கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது அரசாங்கம் தேர்தல் தொடர்பில் அறிவிப்பை மேற்கொண்டதன் பின்னர் இந்தப் பணம் திட்டமிட்டபடி செலவிடப்படும் என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் இந்த நாடாளுமன்றின் ஆட்சிக்காலம் நிறைவடைவதனால் தேர்தலை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் தேர்தல் செயலகம் ஆரம்பித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக