சனி, 21 நவம்பர், 2009
நலன்புரி நிலையங்கள் அனைத்தும் திறந்த முகாம்களாக்கப்படும்
புலிகளுடனான போரின் போது அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் ஏற்படுத்தும் முகமாக, எதிர்வரும் டிசம்பர் முதலாந் திகதி அனைத்து நலன்புரி நிலையங்களும் திறந்த முகாம்களாக்க மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வடக்கின் வசந்தம் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.செட்டிக்குளம் நிவாரணக் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இத்தகவலைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,"அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் முகாம்களில் உள்ள அனைத்து மக்களும் தமது சொந்த கிராமங்களுக்கு மீள் குடியேற்றப்படுவர்.நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள அனைத்து மக்களும் சுதந்திரமாக நடமாடக் கூடிய வகையில் தமது சொந்த இடங்களுக்கு மீளக் குடியேற்றப்படுவர்" என்றார்.அகதிகளுக்கு முக்கியத்துவமிக்கதொரு விசேட அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று மனித உரிமைகள், இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிற்த சமரசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக