இலங்கைக்கு 891 மில்லியன் டொலர்கள் கடன் வழங்குவதற்கு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி இணங்கியுள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பல்வேறு முதலீடுகளை சீனா இலங்கையில் செய்து வருகின்றது. கடந்த மே மாதம் இந்தியா சீனா போன்ற நாடுகளின் ஒத்துழைப்புடன் உள்நாட்டில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்று வந்த மோதல் முடிவுக்கு வந்தது.யுத்தம் இடம்பெற்றபோது பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக இலங்கையின் அரச அதிபர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மேற்கத்தைய நாடுகள் குற்றச்சாட்டுக்களை சுமத்தியபோது அவற்றுக்கு எதிராகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒத்துழைப்பு நல்கின. 2வீத வட்டியில் 20 ஆண்டுகால அடிப்படையில் வழங்கியுள்ள இந்த கடனை கொண்டு இரண்டாவது அனல் மின் நிலையம் வடமேல் மாகாணத்தில் அமைக்கப்படவுள்ளது.
அத்துடன் 350 மில்லியன் டொலரில் நெடுஞ்சாலைகளும் அமைக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்சன ஜாப்பா நேற்றையதினம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக