சனி, 21 நவம்பர், 2009

தங்களது பெயர்களுக்குப் பின்னால் ‘ராஜபக்சே’..என பெயர் மாற்ற சிங்களர்கள் ஆர்வம்

தங்களது பெயர்களுக்குப் பின்னால் ராஜபக்சே என போட்டுக் கொள்ள சிங்களர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனராம். இதனால் பெயர் மாற்றத்தைப் பதிவு செய்ய பதிவாளர் அலுவலகங்களில் கூட்டம் அலை மோதுகிறதாம். ஈழப் போரின் முடிவைத் தொடர்ந்து சிங்களர்கள் மத்தியில் ஹீரோவாகி விட்டார் ராஜபக்சே. புலிகளை ஒடுக்கிய ஹீரோவாக பார்க்கப்படுகிறார் ராஜபக்சே. இதனால் அவரது பெயரை தங்களது பெயர்களுக்குப் பின்னால் சேர்த்துக் கொள்ள சிங்களர்களிடையே பேரார்வம் காணப்படுகிறதாம். பெயர் மாற்றத்தைப் பதிவு செய்வதற்காக பெரும் கூட்டம் அலைமோதுகிறதாம். இதுகுறித்து பெயர்ப் பதிவு அலுவலக ஆணையர் கூறுகையில், எனது 30 வருட சர்வீஸில் இப்படி ஒரு பெயர் மாற்ற கூட்டத்தை நான் பார்த்ததில்லை என்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக