சனி, 21 நவம்பர், 2009

தமிழ் கட்சிகளின் தலைவர்கள் வரட்டு கௌரவம் பிடித்தவர்கள். கருணா.

இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்படுவதற்கு சாத்தியம் உண்டா என முன்னாள் புலி கருணாவிடம் வீரகேசரி இணையம் கேட்டபோது, தமிழ் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் வரட்டுக் கௌரவம் கொண்டவர்கள் எனவும் அவர்கள் ஒருபோதும் இணையமாட்டார்கள் எனவும் இன்று காணப்படும் தமிழ் கட்சிகள் யாவும் விளையாட்டுக் கழகங்களைப் போன்றைவை எனவும் தெரிவித்துள்ளார். அதேநேரம் தான் விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரிந்து வந்தபோது பிரதான கட்சி ஒன்றுடன் இணையும் நோக்குடனேயே அங்கிருந்து வந்ததாகவும், ஆனால் அக்காலகட்டங்களில் புலிகள் தன்னை துரோகி என செய்த பிரச்சாரத்தை முறியடிக்கும் நோக்குடனேயே தமிழ் கட்சி ஒன்றை நிறுவியதாகவும், புலிகளின் பிரச்சாரத்தை தோற்கடித்தவுடன் தனது திட்டப்படி தேசியக் கட்சிகளில் ஒன்றில் இணைந்து கொண்டதாகவும் கூறினார். ஆனால் மேற்குறிப்பிட்ட கபடநோக்கத்துடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பல இளைஞர்களது உயிர்கள் பலி கொடுக்கப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே. ஒட்டு மொத்தத்தில் தன்னை துரோகி என புலிகள் நிருபிக்க கூடாது என்ற நோக்கத்திற்காகவே மேற்படி உயிர்கள் பலி கொடுக்கப்பட்டது என்பது அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக