புதியபாதை வகுத்து தந்த
புண்ணிய சீலன் அவர்
புன்னகைக்கு நீங்கள் தான் தோழா
புவியில் ஓர் அரசனாக
புனிதத்திற்கு புத்துயிர் தந்தவர் எங்கள் தோழர்
புத்திமானின் ஒருவராக புவியில்
புகழ் சுமந்து வலம் வந்த எங்கள் தோழன்
புரிந்தவர்களுக்கு புதிர் இல்லாமல்
புனிதத்திற்கு புத்துயிர் தந்தவர் எங்கள் தோழர்
புகல்லிடம் தேடிவந்த தோழர்களை--அரசியல்
புத்திசாலியாக்கிய பெருமைகுரியவர்
புண்ணியவதி உங்கள் தாய்--நாங்கள்
புண்ணியம் செய்துள்ளோம்
புனிதத்திற்கு புத்துயிர் தந்தவர் எங்கள் தோழர்
புன்னகை முகத்துடன் அரசியல் தாகம் தந்து
புதிதாக மண்ணில் பிறக்க வைத்து
புகழ் வேண்டா தன்னம்பிக்கை கொண்டு
புவிதனில் வலம் வந்து தோழர்களின்
புனிதத்திற்கு புத்துயிர் தந்தவர் எங்கள் தோழர்
புதுயுகம் ஒன்றை படைத்து
புழுதியில் வாடும் மக்களிடம் ஒப்படைக்க
புரட்சிவீரனாக தோழர்கள் மத்தியில்
புதுமை மைந்தனாக புறப்பட்டு
புனிதத்திற்கு புத்துயிர் தந்தவர் எங்கள் தோழர்
புலவர்கள் விளைந்த இந்திய மண்ணில்
புகழ்ச்சியும் வளர்ச்சியும் கண்டு பொறுக்காத
புழுக்களாம் தந்திர புலிகளின் பாசிசம்
புனிதத்தின் நாயகனை அன்று
புழுதி மண்ணில் சாயத்தனரோ....
புவியும் கலங்கிநின்றது மலர்களும்
புன்னகை தர மறுத்தது அன்று
புல்லுருவிகளின் செயல்களினால்
புவிதனில் மக்களின் கண்ணீர் வெள்ளமாக
புதிதாக ஒர் ஆறு கடலை நோக்கி ஓடியது
எங்கள் தோழனின் பிறந்தநாள் நினைவாக இந்த கவிதை அவரின் காலடிக்கு சமர்ப்பணம்... உலகதோழர்கள் ஈழமக்கள் புரட்சீகர விடுதலைமுன்னணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக