வன்னி கூட்டமைப்பு பா.உ கிஷோர் ஜனாதிபதியோடு தமிழ் தலைமை இதுவரை கண்டிராத நெருக்கம்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.இந்த (TNA) கூட்டமைப்பினர் புலிகள் உயிருடன் வாழும்வரை ஜனாதிபதி ஒரு வேண்டப்படாத மனிதராகவும் தீண்டத்தகாத ஒருவராகவும் தெரிவித்து வந்த நிலையில், கடந்த மே மாதம் முள்ளி வாயக்காலில் பிரபாபகரனும் அவரது குழுவினரும் அழிக்கப்பட்ட நிலையில், தற்போது அரசுடன் ஒட்டிக்கொண்டுள்ளனர்.
இவ் கூட்டமைப்பை சேர்ந்த ஸ்ரீகாந்தா, விநோதரலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், கிஷோர் ஆகியோர் வரும் தேர்தலில் அரசுடன் இணைந்தே போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்பக்கப்படும் நிலையிலேயே கிஷோர் ஜனாதிபதிக்கு பிறந்தநாள் வாழ்த்தினை நேரடியாக தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை சுகாதார சேவைகள் பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷும் நேற்றைய தினம் ஜனாதிபதியை நேரில் சந்தித்து தெரிவித்ததுடன் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பிறந்ததின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக