புதன், 23 செப்டம்பர், 2009

பாக்கியசோதி சரவணமுத்துவிடம் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் விசாரணை

கொழும்பு குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு நேற்று அழைக்கப்பட்ட மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் பிரபல மனித உரிமை ஆர்வலருமான பாக்கியசோதி சரவணமுத்துவிடம் சுமார் இரண்டரை மணித்தியாலஙகள் வரையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன் 12 பக்கங்களிலான வாக்குமூலமொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். வாக்குமூலமொன்றைப் பதிவு செய்வதற்காக அவரை நேற்று கொழும்பு குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்திருந்த கருத்து தொடர்பிலும், அது தொடர்பில் பிரபல ஆர்வலர்கள் சிலர் கைச்சாத்திட்டிருந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தமை தொடர்பிலுமே கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
ஜீ.எஸ்.பி. வரிச் சலுகையினை இலங்கைக்கு வழங்க வேண்டாம் என்று பாக்கியசோதி சரவணமுத்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் அறிவித்திருந்தார் என்று அண்மையில் அரசாங்கம் அவர் மீது குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக