புதன், 16 செப்டம்பர், 2009

முகாம்களுக்கு செல்வதற்கு தொண்டர் நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவதாக மனித உரிமைகள் அமைச்சர் தெரிவிப்பு-

சர்வதேச தொண்டர் நிறுவனங்களுக்கு வடக்கிலுள்ள நிவாரணக் கிராமங்களுக்குச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் வெளியிட்டுவரும் குற்றச்சாட்டுக்களை அவர் நிராகரித்துள்ளார். ஐ.நா உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புக்கள் வெளியிட்டுவரும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் முகமாக அவர் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் சபையின் 12வது அமர்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை அமைச்சர் மேற்கண்டவாறு வெளியிட்டுள்ளார். நலன்புரி நிலையங்கள் தொடர்பாக அரசின்மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக