புதன், 23 செப்டம்பர், 2009

ஹபரணையில் இடம்பெற்ற 26வது முதலமைச்சர் மாநாட்டில் 16 பிரேரணைகள்.



வட மத்திய மாகாண முதலமைச்சர் வேட்டி பிரேம்லால் திஷ்ஸாநாயக்க தலைமையில் ஹபரணையில் இடம்பெற்ற 26வது முதலமைச்சர்கள் மாநாட்டில் அனைத்து மாகாண முதலமைச்சர்கள் சார்பில் 16 பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கிழக்கு மாகாணம் தொடர்பாக முன்வைத்த பிரேரணைகள் மிகவும் முக்கியத்துவமானதாகும், உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஒதுக்கீடானது மாகாண சபை வரவு செலவு திட்டத்தில் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட வேண்டும் என்பதாகும், ஏற்கனவே கிழக்கு மாகாண சபைக்கு வரவு செலவுத்திட்டத்தில் நகர சுத்திகரிப்பாளர்களுக்கு மாத்திரமே நிதி ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் கிழக்கு மாகாண சபையில் காணப்படுகின்ற ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான குறிப்பாக உள்ளுராட்சி மன்றங்கள், சுகாதாரம், கல்வி சார்ந்த துறைகள் (பாடசாலை) முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக