என் கணவருடன் உல்லாசமாக ஊரைச் சுற்றி குடும்பத்தைக் கெடுக்கும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும். அடுத்த முறை எங்காவது என் கணவருடன் அவரைப் பார்த்தால் அடிப்பேன்’ என்று நடிகரும் இயக்குநருமான பிரபு தேவாவின் மனைவி ரம்லத் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார். இன்று என்னைக் கண்ணீர் விட வைக்கும் நயன்தாராவுக்கும் நாளை இதே நிலை வரும் என்றும் அவர் உருக்கமாகக் கூறியுள்ளார். இதுவரை இலைமறை காயாக இருந்த நயன்தாரா- பிரபுதேவா காதல் விவகாரம் ‘இனி பிரிக்க முடியாது’ எனும் அளவு நெருக்கமாகிவிட்டதாம். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே கணவன்-மனைவியாகக் குடும்பம் நடத்தி வருகிறார்கள். நயன்தாரா, திருமணம் ஆகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி ரமலத் என்ற மனைவியும், ரிஷி (வயது 6), ஆதித் (2) என்ற 2 மகன்களும் இருக்கிறார்கள். 12 வயதான மூத்த மகன் விஷால், சில மாதங்களுக்கு முன்புதான் புற்றுநோய் காரணமாக இறந்து போனான். இந் நிலையில் பிரபுதேவாவும், நயன்தாராவும் நெருங்கி பழகுவதும், இருவரும் ஜோடியாக சுற்றி திரிவதும், பிரபுதேவாவின் குடும்பத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இப்பிரச்சினையில் பஞ்சாயத்து செய்தும், இந்தக் காதல் ஜோடிகள் அடங்குவதாகத் தெரியவில்லை. இதற்கிடையே பிரபுதேவா டைரக்டு செய்த ‘வான்டட்’ என்ற இந்திப் படத்தை பார்ப்பதற்காக, நயன்தாரா மும்பை சென்றார். இருவரும் ஜோடியாக படம் பார்த்தார்கள். ஜோடியாகவே பேட்டியும் அளித்தார்கள். ‘இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்களா?’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘இப்போதைக்கு பதில் சொல்ல விரும்பவில்லை’ என்று பதில் அளித்தார்கள். நயன்தாராவும், பிரபுதேவாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், திருமணத்துக்குப் பின் நயன்தாரா நடிக்க மாட்டார் என்றும் இப்போது தகவல்கள் கூறுகின்றன. இதற்காகவே தனது படங்களையெல்லாம் விரைவில் முடித்து வருகிறாராம் நயன்தாரா. தமிழில் புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவுமில்லை அவர். இவர்களின் காதல் விவகாரத்தில் நேரடியாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர் பிரபுதேவா மனைவி ரமலத். இதுவரை பத்திரிகைகளுக்கு வெளிப்படையாக பேட்டிகள் தராமலிருந்த அவர் இப்போது பிரபுதேவா- நயன்தாரா இருவரும் தனக்கு செய்து வரும் ‘துரோகம்’ பற்றி பகிரங்கமாகக் கூற ஆரம்பித்துவிட்டார். அவர் கூறியிருப்பதாவது:…“எனக்கும், பிரபுதேவாவுக்கும் 1995ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து 15 வருடங்கள் ஆகிறது. என்னிடமும் என் குழந்தைகளிடமும் அன்பாகவும், பாசமாகவும் நடந்து கொண்டார். என்னிடம் ஒருநாளும் கோபித்துக்கொண்டது கூட கிடையாது.சமீபத்தில்தான் வாடகை வீட்டில் இருந்து அண்ணாநகரில் உள்ள சொந்த வீட்டுக்கு குடிபெயர்ந்தோம். சூட்டிங், விட்டால் குடும்பம் என்றிருந்த என் கணவர் அடியோடு மாறிப்போயுள்ளார்.அவரைப் பற்றி தினமும் வரும் பல்வேறு செய்திகளைப் பார்த்து நொந்து போகிறேன். அவரது குடும்பத்தினரும் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.ஒரு மகனை பறிகொடுத்துவிட்டு துக்கத்தில் இருக்கும்போது, அந்த துக்கத்தை கூட என் கணவருடன் பங்குபோட்டுக்கொள்ள விடாமல் நயன்தாரா இப்படிச் செய்வது நியாயமல்ல. நாளைக்கு நயன்தாராவுக்கும் இந்த நிலை வராது என்பது என்ன நிச்சயம்?அடுத்தவர் குடும்பத்தைக் கெடுக்கும் நயன்…நயன்தாரா கேரளாவில் இருந்து என்ன ‘நோக்கத்துக்காக’ இங்கே வந்தாரோ, அதை மட்டும் செய்யட்டும். அதைவிட்டுவிட்டு, அடுத்தவர் குடும்பத்தை கெடுக்கக் கூடாது.இந்த பிரச்சனையில், ஒரு நடிகரின் தலையீடு இருந்து வருவதாக கேள்விப்படுகிறேன். அவர், புரோக்கர் மாதிரி இருந்துகொண்டு, என் கணவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் தூது போவதாக சொல்கிறார்கள். முதலில் அவர் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவிட்டு, மற்றவர்கள் பிரச்சனைக்கு வரட்டும்.நயன்தாராவைக் கைது செய்யுங்கள்…நான் இருக்கும்போது, வேறு எந்த பெண்ணையும் என் கணவர் திருமணம் செய்ய முடியாது. யாராக இருந்தாலும் விட மாட்டேன். என் கணவர் எனக்கும், என் குழந்தைகளுக்கும் மட்டும்தான் சொந்தம். யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.இதுதொடர்பாக ஒருமுறை நயன்தாராவுடன் நான் போனில் பேசி, சண்டை போட்டேன். அதன்பிறகும் அவர் என் கணவருடன் சுற்றுவதை நிறுத்தவில்லை. இனிமேல் அவரை நேரில் எங்காவது என் கணவருடனோ அல்லது தனியாகவோ பார்த்தால், அடிப்பேன்.மனைவி இருக்கும்போது கணவர் இன்னொரு திருமணம் செய்தால், அவரை கைது செய்கிறார்கள். அதேபோல் இன்னொருத்தியின் கணவரை அபகரிக்க முயற்சிக்கும் பெண்களையும் கைது செய்ய வேண்டும்.சிலம்பரசனை ஏமாற்றிய நயன்..நடிகர் சிலம்பரசனைக் காதலித்து, திருமணம் செய்துகொள்கிற அளவுக்கு நெருங்கிய நிலையில், அவரை தூக்கி வீசியவர்தான் இந்த நயன்தாரா. இதே மாதிரி என் கணவரையும் நாளைக்கு நயன்தாரா தூக்கி வீசமாட்டார் என்று என்ன நிச்சயம்?.இதை உணர்ந்து என் கணவர், நயன்தாராவின் மாயவலையில் இருந்து விடுபட வேண்டும். இதை மீதமுள்ள எங்கள் இரண்டு குழந்தைகளின் நல்வாழ்வுக்காகத்தான் கேட்கிறேன். திரையுலகப் பெரியவர்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு, என் கணவரை எனக்கு மீட்டுத்தர வேண்டும்…” என்று கதறி்யுள்ளார் ரமலத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக