புதன், 23 ஜூலை, 2014

ஐந்து வெவ்வேறு விபத்துக்களில் ஐவர் பலி!!


நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

பொத்துவில், கஹட்டகஸ்திகிலிய, வீரகும்புர, தெஹியத்தகண்டிய மற்றும் ருவான்வெல்ல ஆகிய பகுதிகளில் வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் திருகோணமலை வீதியின் கெக்கிராவ சந்தியில் லொறியொன்று
மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஐந்து வயது சிறுமி உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பொத்துவில் சியம்பலாண்டுவ பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞனே விபத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகல் நீர்கொழும்பு வீதியில் பவுசர் ஒன்று லொறியுடன் மோதியதில் 30 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் மற்றுமொருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தெஹியத்தகண்டிய பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அங்குருவெல்ல வறக்காபொல வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக