வியாழன், 17 ஜூலை, 2014

யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் ஆடிக் கூழை சேர்ந்து காய்ச்சிய வடக்கு முதல்வரும் ஆளுநரும்.!!!

வடக்கு மாகாண கல்வி முறைமை மீளாய்வு அறிக்கை வெளியீட்டு நிகழ்வு யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
இதன் போது ஆடிப் பிறப்பினை முன்னிட்டு ஆடிக் கூழ் காய்ச்சும் ஆரம்ப நிகழ்வும் நடைபெற்றது.
இதன் போது வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநர் இருவரும் பானை வைத்து இதனை ஆரம்பித்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் கலை காலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன.
தொடர்ந்து மாகாண கல்வி மாநாட்டின் அறிக்கை மீளாய்வுக் கலந்துரையாடல்களும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் மற்றும் மாகாண ஆளுநர் உள்ளிட்ட மாகாண சுகாதார, கல்வி அமைச்சர்களும் மாகாண துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.(நன்றி தமிழ் சி என்  என் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக