
பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தோல்வியை எவராலும் தடுக்க முடியாதென சிறீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியும் என ஆளும்கட்சி வெறும் வார்த்தைகளினால் பிரச்சாரம் செய்துவருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தெவிநுவர பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களும், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியொன்றை உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாட்டில் இயல்பு நிலைமையை ஏற்படுத்த வேண்டுமாயின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினைத் தோற்கடிக்க வேண்டும். எதிர்க்கட்சி ஆதரவாளர்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. குறிப்பாக தமது ஆதரவாளர்கள்மீது தாக்குதல் நடத்தப்படுகிறது ஆகக்குறைந்தது ஒரு ஆசன வித்தியாசத்திலேனும் தமது கட்சி ஆட்சியமைக்கும் என எனவும் அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக