யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ள இளைஞர் பாராளுமன்ற 9வது அமர்வைப் புறக்கணிக்கவுள்ளனர்.
கம்பகாவில் இடம்பெற்ற 26 வது இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியில், யாழ் மாவட்ட அணியினர் தாக்கப்பட்டமை, வீரர்களுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் கீழ்த்தரமாக அம்பாந்தோட்டை மாவட்ட அணி நடந்து கொண்டமைக்கு கண்டனம்
தெரிவித்தும்,
தாக்கியவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியுமே இளைஞர் பாராளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிக்கவுள்ளனர்.
இன்று யாழ்ப்பாணக் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் படியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான கடிதங்கள் இளைஞர் விவகார திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அளகப்பெரும, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் நாயகம் லலித் பியூம் பெரேரா உள்ளிட்டவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக