வீட்டில் தனியாக வசித்துவந்த பெண்ணொருவர் நேற்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவமானது அரியாலை வடக்கு சுண்டுக்குளிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சடலத்திலிரந்து வடிந்த ரத்தம் காய்ந்த நிலையில் காணப்பட்டதாகவும் அந்தப்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது இறந்தவர் பெயர் திருநாவுக்கரசு சற்குணவதி (வயது57) ஆகும். குறித்த பெண்ணின் வீட்டுப்புறத்திலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அயலவர் அங்குசென்று பார்த்துள்ளனர் அங்கே பூட்டிய அறையினுள் தலை கழுத்து பகுதிகளில் இருந்து இரத்தம் வடிந்து காய்ந்த நிலையில் விரிப்பினால் போத்திய நிலையில் சடலம் காணப்பட்டது. மூன்று நான்கு நாட்களுக்கு முன்னரே அவர் இறந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. அத்தோடு அந்தப்பெண் அணிந்திருந்த நகைகளையும் காணவில்லை என்று தெரிவிக்கப்படுவதால் கொள்ளையடிக்க வந்தவர்கள் யாரேனும் அவரைக் கொன்றிருக்கலாம் எனக் தெரிவிக்கப்படுகிறது. சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வெள்ளி, 18 டிசம்பர், 2009
அரியாலை வடக்கு சுண்டுக்குளிப் பகுதியில் இரத்தம் காய்ந்த நிலையில் பெண்ணின் சடலம் !
வீட்டில் தனியாக வசித்துவந்த பெண்ணொருவர் நேற்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவமானது அரியாலை வடக்கு சுண்டுக்குளிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சடலத்திலிரந்து வடிந்த ரத்தம் காய்ந்த நிலையில் காணப்பட்டதாகவும் அந்தப்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது இறந்தவர் பெயர் திருநாவுக்கரசு சற்குணவதி (வயது57) ஆகும். குறித்த பெண்ணின் வீட்டுப்புறத்திலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அயலவர் அங்குசென்று பார்த்துள்ளனர் அங்கே பூட்டிய அறையினுள் தலை கழுத்து பகுதிகளில் இருந்து இரத்தம் வடிந்து காய்ந்த நிலையில் விரிப்பினால் போத்திய நிலையில் சடலம் காணப்பட்டது. மூன்று நான்கு நாட்களுக்கு முன்னரே அவர் இறந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. அத்தோடு அந்தப்பெண் அணிந்திருந்த நகைகளையும் காணவில்லை என்று தெரிவிக்கப்படுவதால் கொள்ளையடிக்க வந்தவர்கள் யாரேனும் அவரைக் கொன்றிருக்கலாம் எனக் தெரிவிக்கப்படுகிறது. சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக