வெள்ளி, 18 டிசம்பர், 2009

7 பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவு !

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 7நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். எனினும் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் யார்? என்று குறிப்பிடப்படவில்லை. தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஒருவரை நிறுத்தாமையே தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் சிவாஜிலிங்கத்திற்கு ஸ்ரீகாந்தா கிசோர் சிவநாதன் ஆகியோர் நிச்சயம் ஆதரவு வழங்குவர் என தெரிவிக்கப்படுகிறது. இதனை தவிர தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோவை சேர்ந்தவர்கள் சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் எதிர்க்கட்சிகளுக்கு செல்ல உள்ள வாக்குகளைப் பிரிக்கும் நோக்கிலேயே எம்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மறைமுக ஆதரவில் தேர்தலில் நிற்பதாகத் தெரிய வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக