வெள்ளி, 22 மே, 2015

வடக்கில் அமைதியான ஒரு உணர்வு நிலவுகிறது..

நன்றி - த ஹிந்து

50 வருடங்கள் பழமையான மாவட்டச் செயலக கட்டிட வளாகத்துக்கு jaffna currents situation முன்னால் உள்ள விளம்பர பலகைகளில் “வன்முறை வேண்டாம்” மற்றும் “அழிவுக்கு மறுப்பு சொல்லுங்கள். அவை திரும்பவும் வேண்டாம்” என்னும் வாசகங்களை படிக்க முடிகிறது. அவைகளில் ஒன்று வெளிப்படையாக ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது நிறுவப்பட்டது. ஈழப் போரின் சுமைகளைத் தாங்கிய வட மாகண மக்கள், இந்தச் செய்திகளை உள்வாங்கி இருப்பது போலத் தெரிகிறது. அந்தப் பிரதேசத்தில் ஒரு வகை அமைதி உணர்வு நிலவுகிறது.

ஆட்சி மாற்றம்


இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ஒரு ஆட்சி மாற்றம், அவர்கள் மீது திணிக்கப் பட்டிருந்த அநேக கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறையில் இல்லை என்கிற கருத்தை உணர்த்தியுள்ளது. “ வெள்ளை வான் செயற்பாடுகள்” – வெள்ளைநிற சீரூந்துகளைப் பயன்படுத்தி ஆட்களை கடத்திச் செல்வதும் அதைத் தொடர்ந்து அவர்கள் காணாமற் போவதும் - இப்போது ஒரு கடந்தகால விடயம்.

வவுனியா நகரத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள சிதம்பரபுரம் முகாமில் வசிக்கும் ஒரு வயதானவர் ஒரு காவல்துறை வாகனம் கடந்து செல்வதை கவனித்துவிட்டு ‘த இந்து’ விடம் தெரிவிக்கையில் : முந்தைய அரசாங்கமாக இருந்தால், நீங்கள் இந்த இடத்தை விட்டு சென்றதும் என்னை விசாரணைக்கு உட்படுத்தியிருப்பார்கள். இப்போது எந்த பிரச்சினையும் இல்லை” என்றார்.

கடந்த ஆறு வருடங்களாக பௌதீக உட்கட்டமைப்பு தொடர்பாக அங்கு சில அபிவிருத்திகள் இடம்பெற்று வந்தன. இந்த பிரதேசத்திலுள்ள நெடுஞ்சாலைகள் நாட்டின் இதர பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளை விட மிகவும் நல்ல நிலையில் உள்ளன. நெடுஞ்சாலைகளின் இரு மருங்கிலும் காணப்படும் டிஷ் அன்ட்டனாக்களின் தொகையைக் கொண்டே ஒருவர் இதை மதிப்பிட முடியும் – யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு  ஆகியவற்றை இணைப்பதும் மற்றும் முல்லைத்தீவு மற்றும் வவுனியாவுக்கு இடையே உள்ள வீதிகள் இரண்டிலும். ஈழப்போர் – 4 மே, 2009 ல் ஒரு முடிவுக்கு வந்த முல்லைத்தீவுக்கு அருகில் உள்ள முள்ளிவாய்க்காலில்; கூட இந்த நிலமைதான் உள்ளது. நேர்த்தியாக அமைக்கப்பட்ட வீடுகள் வழி நெடுக நீண்டு கிடக்கின்றன. யாழ்ப்பாணத்துக்கும் மற்றும் கொழும்புக்கும் இடையேயான தொடரூந்து சேவையும் மீள ஆரம்பிக்கப்  பட்டுள்ளது.

“வாழ்க்கை மெல்ல மெல்ல முன்னேறி வருகிறது. மைத்திரி (ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன) அரசாங்கம் நன்றாக செயலாற்றி வருகிறது” எனத் தெரிவித்தார் 1992 முதல் யாழ்ப்பாண ஆயராக இருந்துவரும் வண. கலாநிதி தோமஸ் சவுந்தரநாயகம் அவர்கள்.

எனினும் கதை இத்துடன் முடிவடைந்துவிடவில்லை. நீண்டகால அபிவிருத்தியின்மை, மோசமான நிலையில் உள்ள விவசாயம், வேலையின்மை, மற்றும் இவை அனைத்துக்கும் மேலாக அரசியல் தீர்வு இல்லாத பரிதாபகரமான நிலை என்பன இங்குள்ள குணசித்திரங்களை பெரிய அளவில் படம் பிடித்துக் காட்டுகின்றன. கடந்த மாதம் அனுசரிக்கப்பட்ட நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க நிகழ்த்திய உரையையே அவர்களும் உறுதிப் படுத்தினார்கள்: “ நாங்கள் போரை வெற்றி கொண்டுள்ளோம். நாங்கள் சமாதானத்தை இன்னும் வெற்றி கொள்ளவில்லை” என்பதே அவரது கருத்து. தமிழ் சிவில் சமூக அமைப்பின் அங்கத்தவரான எம்.ரவிச்சந்திரன் “போர் முடிவடைந்து விட்டது ஆனால் மோதல் முடிவடையவில்லை” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பாரிய அளவில் இராணுவ பிரசன்னம் இடம்பெறுவதுதான் பிரதான கவலையாக உள்ளது என ஆயர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக அரசாங்கம் அதிகம் முன்னேற்றம் காட்டவில்லை. முன்னுரிமையின் அடிப்படையில் உள்ளகரீதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள் குடியேற்றத்தை  கவனிக்க வேண்டிய தேவை உள்ளது. வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக  விவசாயத் துறைக்கு புத்துணர்வு ஊட்ட வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் உள்ள ஒரு பெண்ணான மீனாட்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், 2009 மற்றும் 2012 க்கு இடைப்பட்ட காலத்தில் தான் அனுபவித்ததை நினைவு படுத்தும்போது உடைந்துபோய் அழுதார், இறுதிக்கட்ட போர் மற்றும் அதற்குப் பின்பும் என்ன நடந்தது என்பது தொடர்பாக முழுமையான ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

“அது உள்நாட்டு விசாரணையாக இருந்தாலும் சரி அல்லது சர்வதேச விசாரணையாக இருந்தாலும் சரி, விசாரணை நம்பிக்கையானதாக இருக்க வேண்டும்” என்று மீனாட்சி சொல்கிறாள்.

எதிர்காலத்தில் இன்னொரு போராளிக் குழு உதயமாகுமா? வல்வெட்டித்துறையில் காலம் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் வாழ்ந்த வீட்டிற்கு சொற்ப தூரத்தில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தின் அருகில் வைத்து ஒரு இளம் தொலைத் தொடர்பு நிர்வாகியான நிசாந்தன் என்பவருடன் இது பற்றி பேசியபோது, அதற்கான வாய்ப்புகள் மங்கிவிட்டதாக தெரிவித்தார். எனினும் அவர் ஒரு எதிர் கேள்வி தொடுத்தார்: சமூகமானது நீதி மற்றும் நேர்மை என்பன மறுக்கப்படும் ஒரு உணர்வினை தொடர்ந்து அனுபவிக்கும் ஒரு நிலை இருந்தால், அது போர்க்குணத்துக்கு புத்துயிர் வழங்குவதற்கு வழிவகுக்காதா?

யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்திய வீட்டுத்திட்ட பயனாளியும் மற்றும் ஒரு கைக்குழந்தையின் தாயுமாகிய சாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகையில், இன்றைய கால இளைஞர்களின் மனங்களில் பல கவனச்சிதறல்கள் இடம்பெற்று வருகின்றன மற்றும் இது ஏதாவது போராளிக் குழுக்கள் வெளிப்படுவதை சாத்தியமற்றதாக ஆக்கியுள்ளது என்றார்.

யாழ்ப்பாண முகாமையாளர்கள் கருத்துக்களம் அமைப்பின் நிறுவனரான வி. நிரஞ்சன் என்கிற ஒரு சிந்தனாவாதி கூறுகையில் ஸ்ரீலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்து சதவீத பங்கினை வட மாகாணம் கொண்டுள்ளது மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரச்சினை திறமையாக  தீர்வு காணப்படுவதற்கு ஒரு அரசியல் தீர்வுதான் இயல்பான துணையாக இருக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக