புதன், 20 மே, 2015

வவுனியாவில் வர்த்தக சங்கத்தின் பூரண கர்த்தாலுக்கு புளொட் அமைப்பு பூரண ஆதரவு.!

யாழில்‬ ‪‎வித்தியாவிற்கு‬ ‪‎நிகழ்ந்த‬ ‪‎மிலேச்சத்தனமான‬ ‎கொடூரத்திற்கு‬ ‪‎உடனடி‬ ‪நீதி‬ ‪‎நிலை‬ ‪நாட்டப்படவேண்டும்‬ என்ற நோக்கோடு நாளைய தினம்(21.05.2015) வர்த்தக சங்கத்தால் கடையடைப்பிற்கும், காலை 10 மணிக்கு வவுனியா பேரூந்து தரிப்பு நிலையத்தில் பேரணியும் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதாக வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு எஸ்.இராசலிங்கம்  தெரிவித்திருந்தார், இவ் பேரணிக்கும் கர்த்தாலுக்கும் தமீழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) பூரண ஆதரவு வழங்கும் என கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் -

எமது தாயகத்தில் கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க எமது சமூகம் முற்படும் வேளையில், இவ்வாறான இழிவான செயற்பாடுகளுக்கு நாட்டின் நீதித்துறை உயர்ந்த பட்ச பக்கச்சார்பற்ற உடனடி தீர்வினை வழங்கி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்,

இவர்களுக்கான தீர்வின் மூலம் இனி சமூகத்தில் இவ்வாறான கொடூரங்கள் நடைபெறாமல் இருக்க வழங்கப்படும் தீர்ப்பு ஓர் முன்னுதாரணமாக திகழ்ந்து இனி வரும் காலங்களில் இவ்வாறான கொடூரங்கள் நிகழாமல் தடுக்க நாட்டின் நீதித்துறை செயற்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக