சனி, 7 மார்ச், 2015

புதிய தேர்தல் முறை ஒன்றை விரைவில் கொண்டு வர முடியும் லக்ஸ்மன் கிரியல்ல..!!

புதிய தேர்தல் முறைமை ஒன்றை விரைவில் கொண்டு வர முடியும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேர்தல் முறைமையில் மாற்றம் செய்து புதிய தேர்தல் முறைமை ஒன்றை விரைவில் அறிமுகம் செய்யக்கூடிய சாத்தியம் உண்டு.

தற்போது காணப்படும் நவீன தொழில்நுட்ப சாதனங்களின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போது அமுலில் உள்ள விருப்பு வாக்கு முறைமை 1988ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.


தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே இந்த முறைமை அறிமுகம் செய்யப்பட்டது.

அன்று அவ்வாறு துரித கதியில் தேர்தல் முறைமை ஒன்றை அறிமுகம் செய்ய முடியுமாயின், தற்போதைய நவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி புதிய முறைமை ஒன்றை அறிமுகம் செய்வது சிரமமான காரியமாக அமையாது.

அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்தில் புதிய தேர்தல் முறைமை, அரசியல் சாசன திருத்தங்கள் போன்றன அறிமுகம் செய்யப்படும்.

தொகுதிவாரி தேர்தல் முறைமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இணக்கம் வெளியிட்டுள்ளதாக லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக