சனி, 7 மார்ச், 2015

அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை அஜித் பெரேரா..!!

அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சகல அபிவிருத்தித் திட்டங்களையும் இந்த அரசாங்கம் நிறுத்தி விட்டதாக சிலர் செய்யும் பிரச்சாரத்தில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.

பிபிலே பிரதேசத்தில் நான்கு பாதைகள் அமைக்கப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவே தெரிவித்தார்.

சில வீதி அபிவிருத்திப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை உண்மைதான்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஊழல் மோசடிகளின் மூலம் அபிவிருத்தி ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொண்டவர்கள் அபிவிருத்திப் பணிகளை நிறுத்திக்கொண்டுள்ளனர்.


கடந்த அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை தொடர்ந்தும் எம்மால் முன்னெடுக்க முடியாது.

இந்த திட்டங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் மக்கள் சற்று பொறுமையுடன் இருக்க வேண்டும்.

எரிபொருட்களின் விலைகளை இந்த அரசாங்கமே குறைத்துள்ளது.

ஒவ்வொரு முறையும் மக்கள் எரிபொருள் நிரப்பும் போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புண்ணியம் கிடைக்கட்டும் என வேண்டுகின்றார்கள் என அஜித் பெரேரா பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக