சனி, 7 மார்ச், 2015

ஜனாதிபதி ஆலோசகராக கிறிஸ் நோனிஸ் நியமனம்..!!

பிரித்தானியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் ஜனாதிபதி மைத்திரிபாலவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று  நோனிஸிடம் கையளித்தார்.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் அமெரிக்காவில் வைத்து கிறிஸ் நோனிஸ் மீது நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன தாக்குதல் நடத்தினார்.

இதனையடுத்து நோனிஸ் தமது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக