ஞாயிறு, 1 மார்ச், 2015

சீனாவின் நீர்மூழ்கி கப்பல்களை இலங்கைக்குள் வர அனுமதிக்க மாட்டோம் பீஜிங்கில் செய்தியாளர்களிடம் மங்கள..!!

சீனாவின் நீர் மூழ்கி கப்பல்களை எங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் அனுமதிக்க மாட்டோம் என மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சீனத் தலைநகர் பீஜிங்கில் நேற்று சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வெளியுறவு துறை மந்திரி மங்கல சமரவீரா,

கடந்த செப்டம்பர் மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இலங்கைக்கு வந்த அதேநாளில் எந்த சூழ்நிலையில் சீன நீர்மூழ்கி கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்தன? என்பது பற்றி எனக்கு உண்மையில் எதுவும் தெரியாது.

ஆனால், எங்களது ஆட்சிக்காலத்தில் இதைப்போன்ற சம்பவங்கள் இனி நேராது என்று நாங்கள் உறுதியளிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.


கடந்த செப்டம்பர் மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அந்நாள் இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்திப்பதற்காக கொழும்பு நகருக்கு வந்த அதேநாளில் ஜப்பானோடு கடல் எல்லை தகராறில் ஈடுபட்டுவரும் சீனாவின் நீர் மூழ்கி கப்பல்களை கொழும்பு துறைமுகம் பகுதியில் எப்படி அனுமதித்தீர்கள்? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த போதே மங்கள சமரவீர இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை மூலம் இன்னும் கூடுதலான நடுநிலை நிலைப்பாடு ஏற்படுத்தப்படும்.

இதனால் சீனாவுடன்  இலங்கை கொண்டுள்ள உறவுகளை எந்த வகையிலும் பாதிக்காது.

உலகின் மற்ற நாடுகளைப் போலவே, சீனாவுடனான உறவுகளைப் பலப்படுத்தவும் நாம் முயற்சிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக