புதன், 4 மார்ச், 2015

மகிந்தவின் யாழ் மாளிகையை வடமாகாணசபைக்கு தருமாறு கோரிய முதலமைச்சர்..!!

வடபகுதிக்கான விஜயத்தை நேற்று மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான ஜனாதிபதி மாளிகையை நேரில் சென்று பார்வையிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவினால் 460 ஏக்கர் பரப்பில் மிகவும் நவீன வசதிகளுடன் 20 பில்லியன் ரூபா செலவில் இந்த மாளிகை அமைக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவுடன் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் ஜனாதிபதியுடன் இதன்போது சென்றிருந்தார்கள்.

வடபகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான மாளிகையை
வடமாகாணத்துக்கு வருமானத்தை ஈட்டித்தரத்தக்க வகையில் சுற்றுலா விடுதியாகப் பயன்படுத்தும் வகையில் வடமாகாண சபைக்கு தருமாறு இதன் போது ஜனாதிபதியிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையிட்டு தான் பரிசீலிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக