சனி, 7 மார்ச், 2015

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி!! (படங்கள் இணைப்பு)


வவுனியா வடக்கு வலயத்தின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான  ஓமந்தை மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி  வெள்ளிக்கிழமை (06.03) மாலை 2.00 மணியளவில் கல்லூரியின் அதிபர் திரு.சு.திருஞானசம்பந்தமூர்த்தி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி தொடர்ந்து  மாணவர்களின் அணிநடை வகுப்பு மரியாதை, உடற்பயிற்சி கண்காட்சி,
கலாசார நிகழ்ச்சி, பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது.  

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாணசபையின் சுகாதார அமைச்சர் திரு.எஸ்.சத்தியலிங்கம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக உப பொலிஸ் உத்தியோகத்தர் திரு.ஆர்.எஸ்.குமார, வட மாகாணசபை உறுப்பினர் திரு.த.லிங்கநாதன், முன்னைநாள் வவுனியா நகரசபை உப தலைவர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்), வவுனியா தெற்கு பிரதேச சபை தலைவர் திரு.க.சிவலிங்கம், உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.இ.சண்முகலிங்கம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு.தா.அமிர்தலிங்கம்,  ஓமந்தை   கிராம சேவையாளர் செல்வி.செ.அனுசியா, IDM Nation Campus (PVT) Ltd. சார்பாக திரு.விமல், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவர் திரு.சந்திரகுமார் மற்றும் பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அயல் பாடசாலை அதிபர்கள்,  கிராம முக்கியஸ்தர்கள் என பலர்  கலந்து கொண்டனர்.




















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக