வியாழன், 5 மார்ச், 2015

போதைப் பொருள் தொடர்பிலான வழக்குகளை விசாரணை செய்ய தனி நீதிமன்றம்...!!

போதைப் பொருள் தொடர்பிலான வழக்குகளை விசாரணை செய்ய தனி நீதிமன்றம் ஒன்றை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
போதைப் பொருள் கடத்தல், பயன்பாடு, வர்த்தகம், கைவசம் வைத்திருத்தல், இவற்றுக்கு உதவிகளை வழங்குதல், நடவடிக்கை எடுக்கப்படாமை உள்ளிட்டவை தொடர்பில் வழக்குகள் தாக்கல் செய்து விசாரணை நடத்த விசேட நீதிமன்றமொன்று அமைக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் ஏற்கனவே முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விரைவில் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.


பாரியளவிலான போதைப் பொருள் தொடர்பிலான வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகவும், ஏனைய வழக்குகளுடன் இந்த வழக்குகளை விசாரணை செய்வதனால் குற்றவாளிகளை தண்டிப்பது கால தாமதமாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, போதைப் பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக