வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

வவுனியாவில் 'RISE' அமைப்பால் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு!!

வவுனியா மணியர்குளம் வித்தியானந்த வித்தியாலய பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களுக்கு RISE அமைப்பால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (12.02) காலை 10.00 மணியளவில் பாடசாலை ஆசிரியர் திருமதி.ஜெசிந்தா தெய்வேந்திரம் அவர்களின்  தலைமையில் நடைபெற்றது.

வெங்கலசெட்டிகுல அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.இமல்டா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இவ் கற்றல் உபகரணங்கள் அமைப்பால் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் வெங்கலசெட்டிகுல அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.இமல்டா, பாடசாலை ஆசிரியர்களான திருமதி.ஜெசிந்தா தெய்வேந்திரம், திருமதி.சுகந்தினி செந்தில்நாதன், RISE அமைப்பின் ஆலோசகர் திரு.அ.சிவனேந்திரன், தலைவர் திரு.க.லக்ஷ்மிகாந்த், உபதலைவர் திரு.செ.பிரியங்கன், உபசெயலாளர் திரு.செ.யதார்த்தன், உறுப்பினர்கள் திரு.க.மயூரதன், திரு.ஸ்ரீ.கேசவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக