செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

அமெரிக்காவுடன் உச்ச அளவில் இராஜதந்திர உறவுகளை இலங்கை ஆர்வம்..!!

அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகளை புதிய அரசாங்கம் உச்ச நிலையில் பேணுமென பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களை அனுபவமாகவும் படிப்பினையாகவும் கொண்டு தவறுகள் மேலும் நடக்காத வகையில் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் தொடர்ந்தும் வலுப்படுத்தப்படுமெனவும் அவர் கூறினார்.

இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியின் இலங்கை விஜயம் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அமெரிக்க விஜயம் என்பன இருதரப்பு உறவுகளை பலப்படுத்துமெனவும் அவர் தெரிவித்தார்.


இலங்கை வந்துள்ள இராஜாங்க உதவி செயலாளருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது. இலங்கைக்கு வெகுவிரைவில் சிறந்த எதிர்காலம் கிட்டுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் நேற்று வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதி வெளிவிவகார அமைச்சரை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் மார்ச் மாதம் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து இச்சந்திப்பின் போது ஆராயப்பட்டதா? என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக