சனி, 14 பிப்ரவரி, 2015

பசில் ராஜபக்சவை விசாரிக்க இன்டர்போலை நாடவுள்ளது அரசாங்கம்..!!!

முன்னைய ஆட்சியின் போது பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை விசாரணை செய்ய சர்வதேச பொலிஸின் உதவி கோரப்படவுள்ளது.
இலங்கை அரசாங்க பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இது தொடர்பில் சிக்வா செய்திசேவைக்கு தகவல் அளிக்கையில்,

பசில் ராஜபக்சவை விசாரணை செய்ய சர்வதேச இன்டர்போலின் உதவி கோரப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.


மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் பசில் ராஜபக்ச மனைவியுடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

இந்தநிலையில் அவர் மீதும் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் மீதும் ஜே வி பி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவிடமும் முறையிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக