புதன், 25 பிப்ரவரி, 2015

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது பொலிஸ் தலைமையகம்...!!

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு ஒன்றை இலங்கை பொலிஸ் தலைமையகம் நேற்று நிறுவியுள்ளது.
பாரியளவிலான நிதி மோசடிகள், ஊழல்கள், சட்டவிரோத திட்டங்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் நோக்கில் இந்த விசாரணைப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த பிரிவு இயங்க உள்ளது.
இந்தப் பிரிவிற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் பொறுப்பாக நியமிக்கப்பட உள்ளார்.

இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் இடம்பெற்ற, இடம்பெற்று வரும் பாரியளவிலான நிதி மோசடிகள், பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள், ஊழல் மோசடிகள், சட்டவிரோத திட்டங்கள், பொதுமக்கள் பணத்திற்கு எதிரான மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு விடங்கள் தொடர்பில் இந்தப் பிரிவிற்கு முறைப்பாடு செய்ய முடியும்.


அமைச்சரவை துணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் அடிப்படையிலும் இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக